எதிர்க்கட்சி தலைவரின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்குமா அரசாங்கம் ?

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு செய்துகொண்ட உடன்படிக்கை தொடர்பில் விவாதம் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் முதல் தவணை கொடுப்பனவு கிடைத்துள்ளமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்றைய தினம் (22.03.2023) விசேட உரை மூலம் அறிவித்தார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை ஜனாதிபதி நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அதற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தாம் விவாதத்துக்குத் தயாராக இருப்பதாகவும், இன்றைய தினம் இரண்டு நிதி சட்ட மூலங்கள் சார்ந்த விவாதங்கள் நடைபெற இருப்பதால் அதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித், விவாதத்தைத் தாமதிக்காமல் நடத்த வேண்டும் எனவும், தமது தரப்பினரின் கேள்விகளுக்கு அஞ்ச வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், ஜனாதிபதி கோரியமைக்கு அமைய நாட்டை மீட்டெடுக்கும் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமாயின், உடன்படிக்கையில் அனைத்து விடயங்களுக்கும் உடன்பட முடியாது.

எதிர்க்கட்சியினரின் ஒரு சில யோசனைகள் மற்றும் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு தீர்மானங்களை முன்வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் ஏக குரலாக வலியுறுத்தியுள்ளார்.

என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் ஏக குரலாக வலியுறுத்தியுள்ளார்.