டொலருக்கு நிகரான ரூபாவின்பெறுமதி வலுவடைவதற்குப் பல காரணிகள் காரணமாக அமைவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதாரச் செயற்பாட்டின் சில செயற்பாடுகளுடன் அதுவரை டொலர்களை வைத்திருந்த தரப்பினர் அந்த டொலர்களை சந்தையில் விடுவித்தமையும் இந்த நிலைமைக்கு மற்றொரு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என ஃபிட்ச் நிறுவன மதிப்பீடுகள் கணித்துள்ளது.
சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான வலுவான நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளது, ஆனால் வருட இறுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சியடையும் என ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.