இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகச் சீனா, சர்வதேச நாணய நிதியத்திற்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெறுவதற்கு இலங்கைக்குக் காணப்பட்ட மிகப் பெரிய தடை நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.