கிரேக்கத்தில் 45 பேரை பலிகொண்ட புகையிரத விபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்

கிரேக்கத்தில் 45 பேரை பலிகொண்ட புகையிரத விபத்து தொடர்பில்  கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறான விபத்து ஒன்று இடம்பெறும் அபாயம் பல நாட்களாக காணப்பட்டது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரேக்கத்தில் புகையிரதசேவைக்கு பொறுப்பாக உள்ள நிறுவனத்தின் தலைமையகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதியுள்ளனர்.

புகையிரதவிபத்து இடம்பெற்ற பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை கிரேக்கத்தில் புகையிரத சேவை அலட்சியம் செய்யப்படுகின்றது என தெரிவித்து  இன்று போராட்டத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

உயிரிழந்த காயமடைந்த சகாக்கள் ஏனைய பொதுமக்களின் வேதனை சீற்றமாக மாறியுள்ளது என தொழிற்சங்கமொன்று தெரிவித்துள்ளது.

கிரேக்க புகையிரத சேவைக்கு அரசாங்கம் பல வருடங்களாக இழைத்த அவமரியாதையே துன்பியல் நிகழ்வாக மாறியுள்ளது என  தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.