உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க்.
கடந்த டிசம்பர் மாதம் டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்நிலையில், தற்போது அதே டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்டுள்ள எழுச்சி காரணமாக மீண்டும் நம்பர் ஒன் இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில், 187 பில்லியன் டாலருடன் எலான் மஸ்க் முதலிடத்திலும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும் எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவருமான பெர்னார்ட் அர்னால்ட் 185 பில்லியன் டாலருடன் 2வது இடத்திலும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.