முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்களை அனுப்பி வைத்துள்ள கத்தார் அரசு..!

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கிக்கு கத்தார் 10 ஆயிரம் சொகுசு கேரவன்களை அனுப்பி வைக்கிறது.

நிலநடுக்கத்தால் சிதையுண்டு கிடக்கும் துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துச் செல்கிறது. குடியிருந்த வீடுகள் எல்லாம் குப்பையாக கிடக்க கொட்டும் பனியில் மக்கள் குளிரில் தவிக்கும் சூழல் நிலவுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் கேரவன்களை கத்தார் அரசு அனுப்புகிறது. உலககோப்பை கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் தங்குவதற்கு சுற்றுசூழல் மாசுபடாத வகையில் கண்டெய்னர்களில் சொகுசு கேரவன்களை உருவாக்கியிருந்தது. இப்போது, முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்கள் கத்தார் அரசு அனுப்பி வைத்திருக்கிறது