தேன் என்பது பதப்படுத்தப்படாத இனிப்பை கொண்டது. இது நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. தேன் என்பது உணவுப் பொருள் மட்டுமல்ல. இதில் பல்வேறு மருத்துவப் பண்புகளும் நிறைந்துள்ளன. தேனில் உள்ள உடல்நல ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
தேனில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி, பி6, கார்போஹைட்ரேட்கள், அமினோ அமிலங்கள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. அதேசமயம் தேனில் அதிகளவிலான பாக்டீரியா, பூஞ்சை, ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே காயங்களை குணப்படுத்தவும் தேன் பயன்படுத்தப்படுகிறது. தோல், சருமங்களில் ஏற்படும் காயங்களில் தேன் தடவி வந்தால் விரைவில் குணமடையும்.
உடல் கொழுப்பை குறைப்பதில் தேன் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. தூங்குவதற்கு முன்னால் ஒரு ஸ்பூன் தூய்மையான தேன் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையில் மாற்றத்தை உணரலாம். அதேபோல் சிறிய அளவு தேனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். தேன் என்பது பதப்படுத்தப்படாத இனிப்பாகும். இது நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும் இதில் ஈரப்பதம் மற்றும் ஊட்டம் அளிக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. சரும துளைகளை அடைப்பதோடு மட்டுமல்லாமல் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. இருமலுக்கு சிறந்த மருந்தாக தேன் உள்ளது. தேன் குடிப்பதன் மூலம் தொண்டை வலி, கரகரப்பில் இருந்து விடுபடலாம். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன்னர் பாலில் தேன் கலந்து குடிப்பதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.