மத நம்பிக்கை என்பது அந்த சமூகத்தில் வாழ்வோருக்கு பிரதானமானதும் இறுதியானதுமாகும்.

{"subsource":"done_button","uid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1609263046352","source":"other","origin":"gallery","source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1609263046385"}

 

நேற்று 2020.12.28ம் திகதி ஜனாதிபதி தலைமையில் அரசாங்க கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம் அதாஉல்லா மாத்திரமே பங்குபற்றும் அரசியல் சூழல் காணப்பட்டது.

இலங்கையின் அரசியல் கலாச்சாரம் இனவெறுப்பு கோசத்தில் கட்டி எழுப்பப்படும் இக்காலத்தில் பெரும்பான்மைக் கட்சிகளும் சிறுபான்மைக் கட்சிகளும் தமது அரசியல் இருப்பினை தக்கவைக்கவே ஜனாஷா எரிப்பினையும் தடுப்பினையும் கையில் எடுத்துள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தின் கல்வியளாளர்களின் ஈடுபாடு ஜனாஷா எரித்தலை நிறுத்துவதற்கு ஆரம்பத்தில் இருந்த போதும் பின்னர் அவர்கள் சிறுபான்மைச் சமூக இனவெறுப்பு கட்சிகளால் தூரப்படுத்தப்பட்டிருந்தனர்.

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தின் கொரோனா மரண உடலங்கள் அடக்குவதற்கான உரிமை மறுக்கப்பட்ட போது முஸ்லிம் சமூகத்தின் பிரதி நிதிகள் பல்வேறுவகையான பிரயத்தனங்கள் எடுத்த வேளை நீண்ட காலமாக அரசதரப்பு பிரதிநிதிகளை உடலங்களை அடக்குவதற்கான கருத்தொருமைப்பாட்டிற்கு கொண்டுவர தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம் அதாஉல்லா முயன்று நேற்றைய கூட்டத்தில் அதில் சாதக விளைவுகளை பெற்றுக்கொண்டார்.

இதன் படி அமைச்சரான மஹிந்த அமரவீர நியாயங்களை பேசத் தொடங்கியதும் வாசுதேவநாணயக்கார, தயாசிறி ஜெயசேகர, நிமல் சிறிபாலடி சில்வா, திஸ்ஸ வித்தாரன, பவித்திரா வன்னியாராச்சி, விமல் வீரவம்ச, உதய கம்மன்பொல, கம்யுனிஸ் கட்சித்தலைவர் டீ. ஈ. குணசேகர போன்ற பெரும்பான்மைச் சமூகத்தின் பிரதிநிதிகள் சாதகமான பெறுமதிமிக்க கருத்துகளை முன்வைத்து உரைநிகழ்த்தியதாக அறிய முடிகிறது. இவர்களின் மனமாற்றங்களின் பின்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எல் . எம் அதாஉல்லாவின் நீண்ட கால அரசியல் நட்பு காரணமாக இருந்ததனை மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டார்.

ஜனாஷா விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம் அதாஉல்லா என்ன செய்கிறார் என்பதனை அறிய ஆவல் கொள்வோர் இக்கூட்டத்தின் சாட்சிகளாக காணப்படும் தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளான அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வியாழேந்திரன் இருவரோடு பேசுவதன் மூலம் மேலும் உண்மைகளை அறிய முடியும்.

இக்கூடத்தில் பேசிய தேசிய காங்கிரஸ் தலைவர் ஒருசமூகத்தின் மத நம்பிக்கை என்பது அந்த சமூகத்தில் வாழ்வோருக்கு பிரதானமானதும் இறுதியானதுமாகும்.
அது கேள்விக்கு உட்படும்போது ஏட்டிக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டங்கள் நடப்பது இந்த நாட்டிற்கு உகந்ததல்ல எத்தனை நாட்களுக்குத்தான் நாம் இப்படியான சம்பவங்களை பொறுத்துக் கொள்வது என கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் கொரோனாவினை கட்டுபடுத்த உதவுகின்றார்கள் இல்லை என்ற விமர்சனம் எழுந்த போது, கிழக்கு மாகாணத்தில் எமது அக்கரைப்பற்றில் அதிகூடிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போதும் மக்களின் ஒத்துழைப்புடன் அது கட்டுப்பாட்டில் வந்துள்ளதனை பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம் அதாஉல்லா ஞாபகப்படுத்தியுள்ளார்.

மேலும் சில ஜனாஷாக்கள் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் வைத்திய சாலைகளில் உள்ளன அவைகளை அடக்கம் செய்வதற்கு இந்த சபையில் இருப்போர் அவசரமாக முடிவுகளை எடுத்துத் தருமாறும் கேட்டு இன்னும் பல விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம் அதாஉல்லா பேசியதாக மேற்படி செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதன்படி பிரதமரின் குழுவிற்கு மேலதிகமாக ஜனாதிபதி ஒரு நிபுணர் குழுவினை நியமித்து கொரோனா ஜனாஷா எரிப்பிற்கு தீர்வினை எட்டுவதாக முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த அரசாங்கத்தினை நடாத்தி செல்பவர்கள் போராட்டங்களுக்கு தலைசாய்க்காதவர்கள் என்பதனை இறுதி யுத்த காலத்தில் நடந்த சம்பவங்களினூடாக நாம் அறிவோம். எல்லாவகையான சர்வதேச அழுத்தங்களையும் ஒரு புறம் தள்ளிவைத்து இராணுவத் தளபதி சவீந்திர சில்வாவினை ஐக்கிய நாடுகள் சபைக்கு வதிவிடப் பிரதிநிதியாக அனுப்பிய வரலாற்று கற்பிதங்களை முஸ்லிம் சமூகம் அவ்வளவு விரைவாக மறந்திருக்க முடியாது.

எதிர்வரும் 2020. 12.31 ம் திகதி கொழும்பில் இலங்கை தௌஹீத் ஜமாத் நடாத்த இருக்கும் ஆர்பாட்டம் ஜனாஷா அடக்குதல் போராட்டத்திற்கு மதத் தீவிரவாத முத்திரை குத்தாமல் பாதுகாத்துக் கொள்ளல் இவ்வேளையில் முக்கியமான விடயமாகும்.

கொரோனா தொற்று மூன்றாவது அலை மற்றும் புதிய வகை வைரஸ் இலங்கையினை எதிர்வரும் வருடத்தில் வெகுவாக தாக்கலாம் என சுகாதாரப் பிரிவினர் எதிர்வு கூறும் இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் நிபுணர்குழு மீளவும் தமது நடவடிக்கைளில் ஈடுபடுவதே திசைமாறிப்போகும் ஜனாஷா அடக்கும் உரிமையை பெறுவதற்கான சாத்தியத்தினை விரைவுபடுத்தும்.