கிராமிய இளைஞர் யுவதிகளுக்கு தகுதியான வாழ்வாதார வழிமுறை மீது அதிக கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் இலக்கு -பசில் ராஜபக்ஷ

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1609249931165"}

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கமைய சமுர்த்தி பயனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் செயற்பாட்டின்  தலைமைத்துவத்தை  சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கு வழங்கவுள்ளதாக பொருளாதார மீள் எழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும், சமுர்த்தி  பொருளாதாரம், பின்தங்கிய முதலீடு, சுயதொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி குறித்து  கவனம் செலுத்தப்பட்டது. கிராம சேவகப் பிரிவு மட்டத்தில் பெண் முயற்சியாளர்களை தெரிவு செய்து வியாபாரங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான பயிற்சிகள், வசதிகளை வழங்கி, கிராமிய மட்டத்தில் பெண்களைப் பலப்படுத்துவதும், இளைஞர் மத்தியிலுள்ள வேலையின்மைக்குத் தீர்வு வழங்குவதும் இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

விவசாயம், கால்நடை நிர்வாகம், மீன்பிடி, மின் எரிசக்தி உற்பத்தி, வீடுகளைச் சார்ந்த தொழிற்துறை உட்பட 200,000 சுயதொழில் வாயப்புக்களுக்காக இந்த வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக  கிராமிய உற்பத்திகளுக்கான அவசியமான சந்தையை உருவாக்கிக் கொடுப்பது தொடர்பாக வரவு செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதற்காக புதிய 25,000 சந்தை வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இதற்காக நாடு தழுவிய ரீதியில்  சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு 2021 வரவு செலவுத்திட்டத்தை கிராமிய மட்டத்தில் செயற்படுத்துவதற்கான விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. .

சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தை கட்டியெழுப்புவதற்காக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு மாதாந்தம் பில்லியன் ரூபா வரை செலவீடாகும். வேலையின்மையில் உள்ள சமுர்த்திப் பயனாளிகளை ஜீவநோபாய அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடுத்தி பலமான பொருளாதாரத்தை உடையவர்களாக அவர்களை மாற்றுவதற்காக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் சமுர்த்தி முகாமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அரசாங்கம் எதிர்பார்க்கின்ற இலக்குகளை அடைந்து கொள்வதற்காக பெண் முயற்சியாளர்களை உருவாக்கி நிதியுதவிகளை வழங்கி அவர்களின் வியாபாரங்களை விருத்தி செய்வதற்காக வழிகாட்டல் மற்றும் வேலையின்மை காணப்படுகின்ற கிராமிய இளைஞர் யுவதிகளுக்கு தகுதியான வாழ்வாதார  வழிமுறை மீது அதிக கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் இலக்கு என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.