தனிமைப்படுத்தல் விதிகளைப் பின்பற்றி பண்டிகைகளை கொண்டாடுமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம். – தொற்று நோயியல் பிரிவின் பிரதானி

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1609329212018"}

புது வருடப்பிறப்பு மற்றும் அதன் பின்னரான பண்டிகைகளை வழமையைப் போன்றல்லாமல் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடுமாறும், இயன்றளவு மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், புது வருடப்பிறப்புடன் ஏனைய சில பண்டிகைகளையும் கொண்டாடும் காலம் இதுவாகும். எனினும் நாட்டில் கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் வழமையைப் போன்று அவற்றை கொண்டாட முடியாது. அண்மையில் சில பண்டிகைகளை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் கொண்டாடியமையே பல கொத்தணிகள் உருவாகக் காரணமாக அமைந்தது.

இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே பல கொத்தணிகள் உருவாகுவதற்கான வாய்ப்புக்களும் அதிகமுள்ளன. எனவே தனிமைப்படுத்தல் விதிகளைப் பின்பற்றி பண்டிகைகளை கொண்டாடுமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.

தற்போது சிவனொளிபாதமலை யாத்திரையும் ஆரம்பித்துள்ளது. ஏப்ரல் மாதம் வரை இந்த யாத்திரை தொடரும். எனிவே பக்தர்களிடம் நாம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம். இம்முறை அந்த யாத்திரைக்கு செல்வதை இயன்றளவு குறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக முதியோர் , நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தவிரித்துக் கொள்வதே உகந்ததாகும் என்றார்.