தம்மிக்க பண்டாரவின் ஆயர்வேத மருந்து எந்த அரச மருத்துவமனைகளில் நோயாளிகள் மத்தியில் பரிசோதனை செய்யப்பட்டது என்ற தகவல்கள் தமக்கு தெரியாது என்றும் ஆயுர்வேத ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸூக்கு எதிரான மருந்து என்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள தம்மிக்க பண்டாரவின் ஆயர்வேத மருந்து தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

இந்த மருந்து, அரச மருத்துவமனையின்(மேற்கத்தைய) கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதாக ஆயுர்வேத திணைக்கள ஆணையாளார் சத்ரு குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் மருந்தின் இரகசியம் உற்பத்தியாளரான தம்மிக்க பண்டாரவுக்கே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த அரச மருத்துவமனைகளில் இந்த மருந்து நோயாளிகள் மத்தியில் பரிசோதனை செய்யப்பட்டது என்ற தகவல்கள் தமக்கு தெரியாது என்றும் ஆயுர்வேத ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆயுர்வேத நிபுணர்கள் குழு கடந்த 23ஆம் திகதி சமர்ப்பித்த அறிக்கையின் பின்னரே இது தமக்கு தெரியவந்ததாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தம்மிக்க பண்டாரவின் மருந்தை நோயாளிகளுக்கு வழங்குவது ஆயுர்வேத மருந்துகளை அவர்களுக்கு வழங்குவதற்கு சமனாக இருக்காது என்று ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அத்துல சுமதிபால தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ராச்சியத்தின் ஸ்டாப்போர்ட்செயார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

ஆயுர்வே மருத்துவத்தில் பல ஆண்டுகால ஆவணப்படுத்த நிர்வாகத்த்ன் முடிவுகள் மற்றும் மாற்றங்கள் உள்ளன.

எனினும் தமது அறிவின்படி தம்மிக்க பண்டாரவின் மருந்தில் தோற்றமும் வரலாறும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்படாத மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவது விதிமுறையற்ற மற்றும் ஆபத்தான வழிமுறையாகும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த மருந்தை சிறைக்கைதிகளுக்கு மத்தியில் வழங்கும் செயல்திட்டம் முன்னெடுக்கப்படுமானால் அது விதிமுறைகளுக்கு அப்பாற்றப்பட்ட ஒன்றாகவே இருக்கும் என்று பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

1940ஆம் ஆண்டு நாஸி அரசாங்கத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட விதிமுறையற்ற மருத்துவ சோதனைகளுக்காக 7 மருத்துவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.