விவசாயப் பயிர்களுக்கு விலங்குகளினால் ஏற்படும் சேதம் முறையாகக் கட்டுப்படுத்தப்படும் வரையில், உள்நாட்டிலேயே தன்னிறைவான உணவுப்பொருள் உற்பத்தி என்பது அடையப்பட முடியாத இலக்காகவே இருக்கும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.
அண்மைக்காலத்தில் விவசாயப் பயிர்களின் மீதான படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளத்தக்க நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. அவர் மேலும் கூறியிருப்பதாவது:
யானை உள்ளிட்ட சில வன விலங்குகள், பறவைகள் மற்றும் படைப்புழு ஆகியவற்றின் தாக்கத்தினால் விவசாயிகள் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவ்விடயம் பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவ்வப்போது பேசியிருப்பினும் கூட, தற்போது இது குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது.
எனினும் பயிர்களுக்கு விலங்குகளினால் ஏற்படும் சேதம் முறையாகக் கட்டுப்படுத்தப்படும் வரையில், உள்நாட்டிலேயே தன்னிறைவான உணவுப்பொருள் உற்பத்தி என்பது அடையப்பட முடியாத இலக்காகவே இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.