(க.கிஷாந்தன்)
மலையக பல்கலைக்கழகத்திற்கான இடமும் அதற்கு தேவையானபணமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சார் ஜீவன்தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை பகுதியில் 19.12.2020 அன்று இடம்பெற்ற அபிவிருத்தி நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இவ்வாறான நிலையில் பல்கலைக்கழகம் வரவில்லை எனவிமர்சித்தவர்கள் தற்போது வாய் மூடி மொளனம் காப்பதாகவும் அவர்கூறியுள்ளார்.
கொட்டகலை பகுதியில் அபிவிருத்தி பணிகள் சிலவற்றைஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைகூறியுள்ளார்.
‘கொட்டகலை கடந்த 4 வருடங்களாக மறக்கப்பட்டிருந்தது. அபிவிருத்திகளை மேற்கொண்டால் அதன் பெயர்தொண்டமானுக்கு சென்று விடும் என்ற அச்சமே இதற்கு காரணம். மலையக பல்கலைக்கழகத்திற்கான இடமும் அதற்கு தேவையானபணமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் வரவில்லை எனவிமர்சித்தவர்கள் ஏன் இப்போது வாழ்த்த மறுக்கின்றனர்.
தற்போது மலையகத்தில் வீட்டுத் திட்டங்களை ஆரம்பிக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் அமைச்சை பொறுப்பேற்கும்போது கொவிட் நிலைமை இலங்கையிலும், உலகத்திலும் பாரியஅச்சுறுத்தலாக காணப்பட்டது. இவ்வாறான நிலைமையில் மக்கள்மிகுந்த பொறுமையுடன் உள்ளனர். இவ்வாறான நிலையிலும் அரசஇயந்திரம் இயங்குகின்றது. கொரோனாவின் அச்சுறுத்தல்மலையகத்தை பாதித்துள்ளது. ஆயிரம் தொடர்பிலேயேபேசுகின்றனர்.
தொழிலாளர்களின் ஏனைய பிரச்சினைகள் காணாமல் போயுள்ளது. தோட்ட தொழில் கௌவமற்றது என நினைப்பது தவறு. மாறாகஅதை செய்விக்கின்ற முறைமையே தவறானது. தோட்டதொழில்துறையை நவீனமயப்படுத்தி கௌவித்தால் அந்த துறையைபாதுகாக்க முடியும். மலையக கல்வித் தரம் வீழ்ச்சிக்கு வழங்கல்இல்லாமையே பிரதான பிரச்சினை. சுகாதார வழிமுறைகளைமுறையாக கைக்கொள்வதன் மூலமே கொவிட் தொற்றைமலையகத்திலிருந்து ஒழிக்க முடியும்.’ என்றார்.