நல்லாட்சி அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளைகள் திருத்தப்பட்டதால் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிஆள் பிரேரணைகள் தடுக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற அவைத் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரித்தாக இருந்த சலுகைகளுக்கு இது தடையாக உள்ளது என்றும் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கம் 2018 ஆம் ஆண்டில் நிலையியற் கட்டளைகளை மாற்றியமைத்தது. இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த செயற்பாடு காரணமாக சில தனிஆள் யோசனைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நிலையியற்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.