இலங்கை வானொலியில் எனது நிகழ்ச்சி தடை செய்யப்பட்டமை குறித்து…
முப்தி.யூசுப் ஹனிபா
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நிகழ்ச்சி நடாத்துவதற்கு நான்கு உலமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக வலம்வரும் செய்தி உண்மையானதே.
இது தொடர்பாக பல்வேறு நேயர்கள் தமது கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர்.
அன்பர்களே! உங்கள் அனைவரும் எனது மனமார்ந்த நன்றிகள்.
கடந்த 13 வருடங்களாக இலங்கை வானொலி முஸ்லிம் சேவையினூடாக பல்வேறு நல்ல விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இறைவன் சந்தர்ப்பத்தை வழங்கினான். அல்ஹம்துலில்லாஹ்.
இனிமேல் நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கான காரணத்தை நான் அறியவில்லை. அதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தலும் வழங்கப்படவில்லை.
இந்தத் தடைக்கு யாராவது காரணமாக இருப்பார்களாயின் அல்லாஹ் அவர்களை மன்னிக்கட்டும்.
வானொலியில் நிகழ்ச்சி தடைசெய்யப்பட்டது என்பதற்காக தஃவாக்களம் மூடப்பட்டு விட்டதாக அர்த்தம் இல்லை.சமூகத்திற்குப் பயனுள்ள விடயங்களை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் முன் வைப்பேன்.
எமது நிகழ்ச்சிகளில் சமூகத்திற்குப் பயன் இருக்கிறது என்று கருதினால் அரசியல் பிரமுகர்களும் இந்த விடயத்தில் பேசக்கூடியவர்களும் நிகழ்ச்சிகள் தொடர்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது அவர்களது விருப்பமாகும்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்.