வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புவோருக்கான நற்செய்தி!! தனிமைப்படுத்தல் காலத்தை குறைப்பதற்கு அரசு தீர்மானம்


வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோரின் தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்பட உள்ளது.

 

 

கொவிட் தடுப்பு குறித்த தேசிய செயற்பாட்டு நிலையம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் நபர்கள் கட்டாயமாக 28 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது, தற்பொழுது இந்த காலம் 14 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் காலம் குறைக்கப்படுவது குறித்து இன்றைய தினம் அதிகாரபூர்வமாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய முறைமையின் பிரகாரம் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பவதுடன் பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பீ.சீ.ஆர் பரிசோதனையில் கொவிட் நெகடிவ் என பதிவானால் அந்த நபர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்ததன் பின்னர் வீட்டில் சென்று மேலும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியமில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தினை திறப்பது குறித்து பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.