கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா அச்சம்-பிரதிநிதிகளின் அவசர ஒன்றுகூடல்

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா செயலணியின் கிராம மட்ட பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான அவசர ஒன்று கூடல் செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றிருந்தது.

 

 

இதன்போது கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்கும் வகையில் மக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்தோடு ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கமைய செயலக பிரிவில் தனிமைப்படுத்தில் உள்ள குடும்பங்களை வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திணைக்கள அதிகாரிகள் என்ற அடிப்படையில் சென்று அறிக்கையினை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளார்களா என்று சோதனை செய்வது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு தாக்கத்தினையும் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், குறிப்பாக அரச அதிகாரிகளும் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள மரக்கறி வியாபாரிகள் அனைவரும் ஒரு பொதுவான இடத்தில் முன்பு போன்று வியாபாரம் நடத்துவதற்கு ஓட்டமாவடி பிரதேசசபை உரிய இடத்தினை சிபாரிசு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

நன்றி tamil win