பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் புதிதாக மேம்படுத்தப்பட்ட PCR இயந்திரம்…!


பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் புதிய மேம்படுத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களும் (ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஒளிசுழற்சிக் கருவிகள்) 39,000 கொவிட் – 19 பி.சி.ஆர் பரிசோதனைக்கருவிகளும் நிறுவப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கொவிட் – 19 தொற்று பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்குரிய உதவிகளை புலம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்பு வழங்கிவருகின்றது.

இதனூடாக புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருவதற்கும் சுற்றுலாப்பயணிகளின் வருகைக்கான விமானநிலையங்களை மீளத்திறப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

இந்தத் திட்டத்திற்கான முழுமையான நிதியுதவியை சுவிட்ஸர்லாந்து அரசாங்கமே வழங்குகின்றது

இந்தப் புதிய இயந்திர வசதியின் ஊடாக நாளொன்றில் சுமார் 4 மணித்தியாலங்களுக்குள் 1300 பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க முடியும். இதனூடாக பயணிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதுடன் மாத்திரமன்றி கொரோனா வைரஸ் பிறருக்குப் பரவுவதும் தடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.