அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில் இன்று மாலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.
இத்தகவலை ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் சற்று முன்னர் உறுதிப்படுத்துயுள்ளார்.
இதன் அடிப்படையில் ஆலையடி வேம்பு பிரதேசத்தில் வாழும் மக்கள் தேவையற்ற விதத்தில் வெளியேறுவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேநேரம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் 10பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மத்திய சந்தை பிரதேசத்தில் மேலும் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.