வியட்நாமில் கடுமையான புயல் தாக்கத்தினால் இதுவரை 136 பேர் உயிரிழப்பு..!

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1604051585014"}

வியட்நாமில் மோலேவே என்று பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பெய்த பலத்த மழையால் பல மாகாணங்களில் வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புயல், மழை, வெள்ளத்தில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குயங்னம் மாகாணம் தற்போது நிலச்சரிவில் சிக்கியுள்ளது. இந்த சூறாவளியினால் 56,000 வீட்டுக்கூரைகள் சேதமடைந்திருக்கிறது. 17 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளில் வியட்நாமை தாக்கிய புயல்களில் மிக மோசமான புயல் இது என கூறப்படுகின்றது. தற்போது உயிரிழந்தவர்களில் 12 பேர் மீனவர்கள் என்றும் மேலும் 14 மீனவர்கள் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.