மூன்று வேலை உணவு இல்லாத போதிலும் அணிவதற்கு ஒழுங்கான துணி இல்லாத போதிலும் மதுபானம் மற்றும் புகைத்தலுக்கு எவ்வித குறையும் இல்லை – ஜனாதிபதி

Maithri3

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தகுதியானதா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபவத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர் இந்த வர்த்தக சமூகத்தில் பணத்தை மாத்திரம் நேசிக்கின்ற மற்றும் மக்களின் உயிர்களை விட டொலர்களுக்கு மாத்திரம் மதிப்பளிக்கின்றவர்களுக்கு எதிராக அரசாங்கம் என்ற வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் தேவை உள்ளது.

மேலும் மூன்று வேலை உணவு இல்லாத போதிலும் அணிவதற்கு ஒழுங்கான துணி இல்லாத போதிலும் மதுபானம் மற்றும் புகைத்தலுக்கு எவ்வித குறையும் இல்லை். இதற்கு உலக நாடுகள் வழங்கும் தண்டனைகள் தொடர்பில் கடந்த வாரத்தில் தேடி பார்த்தேன். நாட்டில் கருத்தாடல் ஒன்றை ஏற்படுத்த உத்தேசித்துள்ளேன்.

அவர் மேலும் தெரிவித்ததாவது போதைப் பொருள் விற்பனை , கொண்டு வருதல் , விநி யோகித்தல் ஈடுப்படுபவர்களுக்க மரண தண்டனை வழங்குதல் சரியா என்பது தொடர்பில் கருத்தாதடலை உத்சேித்துள்ளேன். ஆனால் இதற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் வரலாம். சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். அத்துடன் பிரச்சினைக்குத் தீர்வு மரண தண்டனை இல்லை என நாட்டிற்குள் இருப்பவர்கள் கூறலாம்.

ஆனால் உலகின் பல நாடுகளில் இந்த தண்டனை நடைமுறையில் உள்ளது. இது தொடர்பில் மக்களுக்கு கலந்துரையாட ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்துகின்றேன். போதைப்பொருள் விற்பனை செய்கின்ற விநியோகிக்கின்றவர்களுக்கு எதிராக மரண தண்டனை வழங்குவது ஏற்புடையதா? என்பது தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பு தேவைப்படுகின்றது. சூழலை புரிந்து கொண்டு எதிர்வரும் நாட்களில் ஒரு தீர்மானம் எடுக்க முடியும்.