நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25–ந் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
7.8 ரிக்டர் அளவு கோலுக்கு பதிவான இந்த பூகம்பத்தக்கு சுமார் 9 ஆயிரம் பேர் பலியானார்கள். சுமார் 2 லட்சம் பேர் பாதிப்புகுள்ளானார்கள்.
பூகம்பத்துக்குப் பிறகு சுமார் 200 தடவை நில அதிர்வும் ஏற்பட்டது. இது தவிர கடந்த மாதம் 16–ந் தேதி மீண்டும் ஒரு தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இவையெல்லாம் நேபாளம் மக்களிடம் தீராத துயரத்தை ஏற்படுத்திவிட்டது. இந்தியாவின் வட மாநிலங்களிலும் இந்த பூகம்பதாக்கம் உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் வட மாநிலங்களில் மீண்டும் ஒரு தடவை பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் இந்த ஆபத்தை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘‘இந்திய நிலத்தட்டும் ஐரோப்பிய நிலத்தட்டும் ஆண்டுக்கு 5 சென்டி மீட்டர் அளவுக்கு நெருக்கி வருகின்றன. இந்த நிலத்தட்டுக்களின் சந்திப்பு இந்தியா – திபெத் இடையே ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் மீண்டும் பூகம்பம் ஏற்படும்’’ என்று கூறியுள்ளனர்.
இமயமலை பகுதியில் இனி ஏற்படும் பூகம்பம் ரிக்டர் அளவு கோலில் 8.2 முதல் 8.6 வரை இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் காலங்களில் ஏற்படும் நிலநடுக்கம் இமயமலை அமைப்பிலும் மாற்றத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.