முதலமைச்சர் ஊடகப் பிரிவு
கிழக்கு மாகாணத்தில் கல்வியை மேம்படுத்த, கல்வியலாளர்களை ஊக்குவிக்க முடிந்த உதவிகளை கிழக்கு மாகாணத்துக்கு செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் குழுவினர் இலங்கைக்கான யுனிசெப் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாணத்தில் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதற்காக பாரிய செலவீனங்கள் தேவையாக இருக்கிறது. இதற்காக நிதிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள இலங்கையில் உள்ள யுனிசெப் நிறுவனத்தின் அதிகாரியை அவரது மட்டக்களப்பு காரியாலயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் குழுவினர் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண முதலமைச்ச்ர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கல்வி அமைச்சர் தண்டாயுத்பாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் , கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிஷாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது பல விடையங்கள் பேசப்பட்டதுடன் அதர்கான தீர்வுகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தனர்.