கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பூரண பிரதேச செயலகமாக இயங்கச் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது அவர் இந்த இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் குறித்த பிரதேச செயலகத்துக்கான எல்லைகளை நிர்ணயம் செய்யும் அறிக்கையை பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துக்கு கணக்கு வழக்குகளை பார்ப்பதற்காக அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து பிரத்தியேக அதிகாரி ஒருவரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவித்தல் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று அல்லது நாளை வெளியிடுவார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
Thanks. tamilan.lk