சட்ட ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்படி அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 14 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஜீ.பி.அபேகோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாலித பிரணாந்து, எஸ்.அனில் சில்வா, மனோஹார டி சில்வா, பேராசிரியர் ஹர்ஷ கபில்ராஜ், இக்ரம் மொஹமட், சஞ்ஜீவ பிரனீத் ஜெயராஜ் ஆகியோரும் சட்டத்தரணிகளான பேராசிரியர் லக்ஷமன் மாரசிங்க, தாரணி எஸ்.விஜேதிலக, பேராசிரியர் காமிலா குணரத்ன, எம்.சுவாமிநாதன், என்.செல்வக்குமார், நவீன் சரத்மாரப்பன, திசாத் விஜேகுணவர்த்தன, ஜீ.ஜீ.அருள்பிரகாசம் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை 2015ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த சட்ட ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.