வில்பத்து விவகாரத்தில் அமைச்சர் றிஸாத் மீதான சந்தேகப் பார்வை …!

rishad-bathiudeen_1

 வில் பத்து விவகாரத்தினை தற்போது சிஹல ராவய அமைப்பே தூக்கிப் பிடித்து பூதகரமாக்கியுள்ளது.இவ் அமைப்பானது அமைச்சர் றிஸாத்தினைக் கைது செய்யாது விடுகின்ற போது உண்ணாவிரதத்தில் களமிறங்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.இவ் அமைப்பானது ஹெல உருமய அரசியற் கட்சியின் ஒரு பிரிவாகவே பார்க்கப்பட்ட அமைப்பாகும்.இவ் அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரோ ஹெல உறுமய கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார்.தற்போது ஹெல உறுமய பல கூறுகளாக பிரிந்து காணப்படுவதனால் இவ் அமைப்பின் தற்போதைய ஆதரவு பற்றி தெளிவு படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லாது போனாலும் இவ் அமைப்பின் செயற்பாடு அரசியல் இலாபங்களுக்கானது என்பதனை தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

இக் குடியேற்றம் சட்ட விரோதமானது என நிரூபிக்கப்பாட்டாலும் அமைச்சர் றிஸாத்தினை எவ் விதத்திலும் அடக்கி ஒழிக்க முடியாது என்பதே உண்மை.இக் குடியேற்றங்களினை நிறுவுவதற்கு இவர் அடிப்படைக் காரணியாக இருந்தாலும் நேரடியாக இவர் அக் குடியேற்றங்களில் சம்பந்தப்படவில்லை.இவர் நேரடியாக சம்பந்தப்பட அக் குடியேற்றம் நடை பெற்ற காலப்பகுதியில் சுற்றாடல் அமைச்சராகவோ,மீள் குடியேற்ற அமைச்சராகவோ,வனப் பாதுகாப்பு சம்பந்தமான பதவிகளிலோ இவர் இல்லாத போது இவரினை எப்படித் தண்டிக்க முடியும்? இதில் அமைச்சர் றிஸாத்திற்கு எவ்விதமான பாதிப்பும் சட்ட ரீதியாக வராது என்கின்ற நிலைமை தெளிவாக காணப்படுகின்ற போதும் ஊடகங்கள் இப் பிரச்சினையினை அமைச்சர் றிஸாத் தனது உயிரினை பணயம் வைத்துச் செய்கின்ற ஒரு செயற்பாடாக சித்தரிப்பது அமைச்சர் றிஸாத்தின்  பிரபலத்திற்ககாகவா? போன்ற வினாக்களினையும் எழுப்பத்தான் செய்கின்றது.பல ஊடகங்களினை இவர் தன் கையினுள் வைத்துச் செயற்படுகிறார் என்பது தற்போது மிகப் பெரிய பேசு பொரும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ் பிரச்சினையில் ஏனைய அரசியல் வாதிகளின் தலை ஈடுகள் அதிகம் இல்லாமைக்கு முன் வைக்கப்படும் இன்னுமொரு காரணங்களில் ஒன்றுஅமைச்சர் றிஸாத் இதில் ஊழல் செய்துள்ளதால் தாங்கள் இவ் விடயத்தில் மூக்கை நுழைவிக்க விரும்பவில்லைஎன்பதாகும்.இது சற்று சிந்திக்கப்ட வேண்டிய ஒரு விடயமும் கூட.அண்மையில் இவரின் மீது மு.கா இனைச் சேர்ந்த ஒருவர் வில்பத்துவினை மையமாகக் கொண்ட ஊழல் குற்றச் சாட்டினை முன் வைத்து நீதி மன்றம் சென்றிருந்தார்.அவ் வழக்கிற்கு இன்று என்ன நடந்துள்ளது என்பது மறைக்கப்பட்டுள்ளது.அது மாத்திரம் அல்லாது அவ் வழக்கு தாக்கல் செய்த நபரினது உறவினரிற்கு குறித்த வழக்குத் தாக்குதலின் பின் இவரினது அமைச்சில் பணிப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கதைகள் சிலு சிலுப்பதானது .சில சந்தேகங்களினையும் கிளறி விடுகிறது.இவ் வழக்குத் தாக்களினை உடனே விசாரிக்குமாறு அமைச்சர் கோரிய போதும் ஏன் அது விசாரணைக்கு உட்படுத்தப்பட வில்லை? நீதி மன்றம் விசாரணை மேற்கொள்ளாமலேயே தீர்ப்பினை வழங்கி விட்டதோ?

இக் குடியேற்றங்கள் அமைக்க அங்கிருந்து வெட்டப்பட்ட மரங்கள் எங்கே கொண்டுசெல்லப்பட்டன? அதனை விற்ற பணம் எங்கே சென்றது? என்ற வினாவிற்கு இற்றை வரை பதில்கள் இல்லை.இது அமைச்சர் றிஸாத்திற்கு தெரியாமல் நடைபெற்றிருக்கவும் வாப்பில்லை.அமைச்சர் றிஸாத் ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளினை பிடித்து வைத்திருப்பதாக கதைகள் வந்தாலும் அவ்வாறு இருந்திருந்தால் அது இச் சந்தர்ப்பத்தில் இலகுவில் சந்தைக்கு வந்திருக்கும்.ஒரு அரசியல் வாதியும் தன் பெயரில் சொத்துக்களினை குவிக்கும் அளவு முட்டாளும் அல்ல.

இவ் விடயத்தினை பல ஊடகங்கள் கணக்கு எடுக்காமல் இருந்த போதும்  பேரின மக்கள் முன் கொண்டு செல்லுவதில் ஹிரு தொலைக் காட்சி முக்கிய வகி பாகம் வகித்தது.இவ் தொலைக் காட்சி சு.க ஆதரவு ஊடகம் என பேசப்படும் ஒரு ஊடகமாகும்.இத் தொலைக் காட்சி உருமையாளரின் உறவினர் ஒருவர் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் சு.க சார்பாக களமிறங்குவார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.அமைச்சர் றிஸாத் இற்றை வரை தேர்தல்கள் அனைத்திலும் சு.க சார்பாகவே போட்டி இட்டும் வரும் ஒருவர்.இம் முறையும் வழமை போன்று சு.க போட்டி இடுவார் என்றே நம்பப்படுகிறது.இத் தொலைக் காட்சியினை அமைச்சர் ரிசாத் ஏன் தனது பிரபலத்திற்கு பயன்படுத்தி இருக்கக் கூடாது? இத் தொலைக் காட்சியில் அமைச்சர் றிஸாத்தின் ஒரு விவாதம் நடாத்தப்பட்டது யாவரும் அறிந்ததே! இவ் விவாதத்தின் முடிவு அமைச்சார் ரிசாத்திற்கு சார்பாகவும் இத் தொலைக் காட்சியிற்கு எதிராகவும் அமைந்திருந்தது.தான் தோல்வியுற்ற விவாதத்தினை ஏதாவது ஒரு தொலைக் காட்சி மீள் ஒளிபரப்புச் செய்யுமா? ஆனால்,அதனை ஹிரு தொலைக் காட்சி செய்துள்ளதானது அங்கே ஏதோ ஒரு புறக்காரணியின் செல்வாக்கு இருப்பது தெளிவாகிறது.அமைச்சர் றிஸாதினுடைய கட்சி தவிர்ந்து ஏனைய முஸ்லிம் அரசியல் வாதிகள் ஐ.தே.க சார்பாகவே தேர்தல் கேட்பார்கள் என்ற நிலைமை தற்போது உள்ளதால் முஸ்லிம் வாக்குகளினைக் சு.க கைப்பற்ற அமைச்சர் றிஸாத்தினை சு.க பலப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.அதற்கு இதனை ஒரு பகடைக்காயாக பயன்படுத்துகிறார்களா? எலி இலகுவில் எதனையும் அறுத்து விடும் ஆனால் தூக்கிச் செல்ல அதனால் இயலாது.

தற்போது தொகுதி வாரித் தேர்தல் முறைமை அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது.வன்னியில் தமிழ் மக்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் வன்னியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரினைப் பெறுவது இயலாத காரியம்.குறுகிய காலத்தினுள் முஸ்லிம் பிரதிநித்தித்துவத்தினை பெறச் சாத்தியமான மாவட்டத்தில் போட்டி இட்டு வெற்றி பெற குறுகிய காலத்தினுள் அமைச்சர் றிஸாத்திற்கு அதிகம் பிரபலமும் தேவைப்படுகிறது.இதற்கு இது சிறந்த வழிகளினை ஏற்படுத்தும் என்பதால் இது திட்டமிடப்பட்ட ஒன்றா? என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.

அமைச்சர் றிஸாத் தவிர்ந்து அனைத்து அரசியல் வாதிகளும்  மௌனிக்கும் போதும் ஊடகங்கள் மு.கா இனை மாத்திரம் மக்கள் குறி வைப்பதானது மு.கா வின் வாக்கு வங்கியினுள் அமைச்சர் றிஸாத் நுழைய இச் சந்தர்ப்பத்தினை பயன்படுத்துகிறார் என்ற விடயத்தினை எமக்கு கூறுகிறது....கா கட்சி அங்கத்தவர்கள் இதனையே சாக்காக வைத்து ஆர்பாட்டங்கள் செய்து தமது கட்சியினை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்..

மேலுள்ள சில விடயங்கள் அமைச்சர் றிஸாத் மீது சில சந்தேகங்களினையும் கிளறி விடத் தான் செய்கிறது.எது எவ்வாறு இருப்பினும் தமக்கு கொடுக்கப்படுகின்ற பதவிகள் பற்றி இறைவன் மறுமையில் விசாரிப்பான் என்ற எண்ணத்தில் செயற்பட வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்