உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்தில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைதியாக வீடுகளுக்குள் தங்கியிருக்குமாறு அனைவரிடமும் அரசாங்கம் வேண்டுகோள் விடுப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.