இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஐ.நா சபை வருத்தமடைவதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பானது, சமீபத்திய இன வன்முறைகள் தொடர்பாக வருத்தமடைவதுடன், இந்நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறது.
ஐ.நா வானது உடனடியாக இவ்வன்முறைகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், இயல்பு நிலையை கொண்டுவரவும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறது.
மேலும் நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துமாறும், மனித உரிமைகளையும், எல்லோருக்குமான பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறும் அதிகாரத் தரப்பினரையும் பொது மக்களையும் வேண்டி நிற்கின்றது என அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.