நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக பல்வேறு துறைகள் மூலம் சுகாதார அமைச்சுக்கு தெரியவந்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இவ்வாறு சட்டவிரோத மருத்துவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர பொலிஸ் தலைமையகத்தின் உதவியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் தற்போது 15 ஆயிரம் மருத்துவர்கள் தனியார் வைத்திய சேவைகளில் பணியாற்றி வருகின்றனர்.போலி மருத்துவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர மருத்துவர்கள் தனியார் வைத்திய சேவை கட்டுப்பாட்டுச் சபையில் தங்களை பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க சுகாதார அமைச்சுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தனியார் மருத்துவ துறையில் பணியாற்றும் மருத்துவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.அத்துடன், மருத்துவர்கள், இலங்கை மருத்துச் சபையில் தங்களை பதிவு செய்து கொள்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் தரமான சுகாதார சேவையை மக்களுக்கு வழங்க முடியும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.