இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
இது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த தூதர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபரின் இந்த முடிவு ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானத்துக்கு பொருத்தமற்றது. மத்திய கிழக்கு பிராந்திய அமைதிக்கு இதனால் நன்மை ஏற்படாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.