பிரித்தானிய ஸ்டெலிங் பவுண்ட் யூரோவிற்கு எதிராக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

பிரித்தானிய ஸ்டெலிங் பவுண்ட் யூரோவிற்கு எதிராக வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஆறு மாதங்களின் பின்னர் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
 
விடுமுறை கால வருமானங்களினால் பவுண்ட் இந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.கோடை காலங்களில் யூரோவுடன் ஒப்பிடும் போது பவுண்ட் 6 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 இதேவேளை, நேற்றைய தினம் சிறப்பான நிலை ஒன்றை பவுண்ட் பதிவு செய்துள்ளது.பிரித்தானிய வங்கிகளின் அறிக்கைகளுக்கமைய நேற்று காலை 11.24 மணி வரையில் யூரோ வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளின் முதற்கட்டத்தில் லண்டன் மற்றும் பிரஸ்ஸல்ஸ் இடையே ஏற்படுத்தி கொள்ளப்பட்ட உடன்பாட்டு தொடர்பில் பிரித்தானிய வர்த்தகர்கள் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.