ரணிலின் UNP கட்சியில் இணைந்து அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சி சபை கேட்பதா..? முனாஸ்

 இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலை சிலை விவகாரம் ஒரு அப்பட்டமான அத்துமீறல் அதனைக் கேட்ட நம்ம முஸ்லீம் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் சகிதம் இருக்க அம்பாரையில் நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தயாகமகே வழங்கிய பதில் இறக்காமம் மாத்திரம் அல்ல கல்முனை இருந்து பொத்துவில்வரை பெளத்த புனிதபூமி என்னவும் செய்யலாம் சிலையை அகற்ற முடியாது.


மாறாக இன்னமும் வைக்க வேண்டும் முடிந்ததைச் செய்யுங்கள் என்று கூறிய தயாகமகே என்னும் இனத்துவேசி இருக்கும் கட்சியில், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து அட்டாளைச்சேனையில் தேர்தல் கேட்பதா..?

இந்த சிலைவைப்பு தொடர்பில் மக்களுக்கு இதுவரை ஏர்க்ககூடிய ஒரு பதிலை வழங்காத ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கும் கட்சியில் இணைந்து அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சிசபை கேட்பதா..?

அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து தேர்தல் கேட்க முடியாது. ஒரு காலமும் இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அப்படியோ அடங்கிப்போயிருக்க அடுத்த கட்டமாக வரும்தேர்தலை ஐக்கிய தேசிய கட்சிக்காக வென்று கொடுத்து விட்டு நமக்கென்று இருக்கும் ஒரு கட்சியின் பெயரையும் இல்லாமலாக்க இடமளிக்க முடியாது.

அப்படி ஒரு படுகுழியில் விழும் முடிவினை அட்டாளைச்சேனை மக்கள் எடுப்பார்களேயானால் அதனை விட பாரிய நஷ்டம் வேறு எதுவும் இருக்க முடியாது.

எனவே மக்களை ஏமாற்ற நான் ஒருபோதும் முன்னிக்க மாட்டேன். மக்களுக்காக எடுக்கும் முடிவு அது மக்களுக்கேற்ற முடிவாக இருக்க வேண்டுமே தவிர மூடிய அறைக்குள் சிலரின் சுய நலனுக்கான சாக்குநிறப்பும் முடிவாக இருக்க முடியாது.

ஆகவே அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தேர்தல் கேட்க வேண்டும். என்பதே எனது ஆணித்தரமான கருத்தாகும்.
என்பதனை தெளிவாகக் கூறிவைக்க விரும்புகிறேன் .

SL. முனாஸ் 

முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்