தனிக்கட்சி தொடங்குகின்றார் நடிகர் ரஜினிகாந்த் , நேரடியாக தமிழக சட்ட சபை தேர்தலில் களமிறங்குவார் ?

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை வரும் டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் அவர் வெளியிட வாய்ப்புள்ளது. நீண்டகாலமாக அரசியலுக்கு வருவேன் என்று கூறியபடியே இருப்பவர் ரஜினிகாந்த். அவர் வருவாரா என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் நரை பாய்ந்து வயதாகி விட்டனர். நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை வரும் டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் அவர் வெளியிட வாய்ப்புள்ளது. நீண்டகாலமாக அரசியலுக்கு வருவேன் என்று கூறியபடியே இருப்பவர் ரஜினிகாந்த். அவர் வருவாரா என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் நரை பாய்ந்து வயதாகி விட்டனர். 

 இந்த நிலையில்தான் வரும் டிசம்பர் மாதம், ரஜினி ரசிகர்கள் இத்தனை ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த அந்த செய்தி வந்து சேரப்போகிறது. டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்த தினமாகும். அன்றைய தினம், ரஜினி புதுக்கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார். 

 ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், ரஜினியின் அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் தனிக்கட்சிதான் தொடங்குவார். பாஜக உட்பட எந்த ஒரு கட்சியிலும் இணையும் எண்ணம் ரஜினிக்கு இல்லை. லோக்சபா தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் அவருக்கு இல்லை. நேரடியாக தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தமாகவே அவரது அரசியல் பயணம் இருக்கும். 

 ரஜினி vs ஸ்டாலின் என்ற போட்டியை அடுத்த சட்டசபை தேர்தலில் உருவாக்குவதே அவரது எண்ணம்” என்கிறார் ரஜினிக்கு நெருக்கமான முக்கியஸ்தவர் ஒருவர். ஆன்மீக நம்பிக்கையுள்ள ரஜினி இடதுசாரி கொள்கையோடு இருக்க முடியாது. மதத்திணிப்பை ஏற்படுத்தும் வெறியும் அவருக்கு கிடையாது. 
 எனவே வலதுசாரியாகவும் அவர் இருக்க மாட்டார். நடுநாயகமாக இருந்து அனைத்து தரப்பு மக்களையும் ரஜினி கவருவார்” என்றார் அந்த முக்கியஸ்தர். ;”கபாலி திரைப்படம் தலித் மக்கள் மேம்பாட்டின் குறியீடாக பார்க்கப்பட்டது. ரஜினியின் அடுத்த படமான காலா அதே போன்ற ஒரு படமாகவே இருக்கப்போகிறதாம். 

 அதேநேரம், ஜாதி அடிப்படையில் மட்டுமே அரசியல் நடத்துவதில் ரஜினிக்கு விருப்பம் இல்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.இது குறித்து எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “ரஜினியும், கமலும் பொது வாக்காளர்களை கவருவதில்தான் இலக்குடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.

 திமுகவுக்கு இப்போது தமிழகத்தில் வலுவான போட்டியாளர் இல்லை. ரஜினியின் அரசியல் வருகை அந்த நிலையை மாற்றும் என்றார். பொது வாக்குகளை கவருவதோடு, கமல்ஹாசனின் திட்டம், திமுகவின் வாக்கு வங்கியான திராவிட கொள்கையாளர்களாக உள்ளது. 
 இந்துத்துவாவுக்கு எதிரானவர்கள் வாக்குகளை கமல் ஈர்க்க முயல்கிறார் என்று தெரிவிக்கிறார், ஆய்வாளர் காசிநாதன். ஆனால், சிறுபான்மையினர், ரஜினியை, பாஜகவின் ஆள் என்றுதான் நினைப்பார்கள் என்கிறார் அவர்.