பெற்றோலையே முறையாக பகிரமுடியாத இவ்வரசு , சமஸ்டி பிரச்சினையை எப்படிக் கையாள்வார்கள்? மஹிந்த கிண்டல்

பெற்றோல் பிரச்சினைக்கே தீர்வைத் தர திண்டாடும் இந்த அரசு பெடரல் விவகாரத்தை எப்படி (சமஷ்டி) கையாளப்போகின்றதோ என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.பெற்றோல் பிரச்சினைக்கே தீர்வைத் தர திண்டாடும் இந்த அரசு பெடரல் விவகாரத்தை எப்படி (சமஷ்டி) கையாளப்போகின்றதோ என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இந்த அரசிடம் நிர்வாகத் திறனோ அல்லது முகாமைத்துவ திறனோ துளியளவேனும் இல்லை.எந்த விடயத்தில் கை வைத்தாலும் பிரச்சினை தலைவிரித்தாடுகின்றது. அவற்றைத் தீர்ப்பதற்குரிய நடைமுறையும் அரசுக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

 குறிப்பாக, பெற்றோல் பிரச்சினையையே தீர்க்கமுடியாதவர்கள், இந்த பெடரல் பிரச்சினையை எப்படிக் கையாள்வார்கள்? பெற்றோலையே முறையாக பகிரமுடியாத இவர்கள், அதிகாரங்களைப் பகிர்ந்த பின்னர் அதை எப்படி முகாமை செய்வார்கள்? ஒன்றுமே புரியவில்லை.ஆட்சி மாற்றமே இவற்றுக்கெல்லாம் தீர்வாக அமையும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.