ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும் : பிரித்தானியா

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னரும், பிரித்தானியாவில் தற்போது தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள், அதற்காக விண்ணப்பம் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான திணைக்களமும், பிரித்தானியாவின் உள்துறை அமைச்சும் இன்று தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்திற்கான அமைச்சர் டேவிட்டேவிஸ் கருத்து தெரிவிக்கையில்,“ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் உரிமைகளை பாதுகாக்கும் விடயத்திற்கு பேச்சுவார்த்தைகளில் நாங்கள் முன்னுரிமை அளித்து வருகின்றோம்.

பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்பும் அனைவருக்கும் புதிய நடைமுறைகள் ஊடாக ஆதரவு வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.