நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அமைச்சரவைக் கூட்டத்தில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அமைச்சரவைக் கூட்டத்தில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் போது எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர்களுக்கு இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, அமைச்சரவைக்கு விளக்கம் அளித்துள்ளார்.இதன் போது அமைச்சரின் விளக்கத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் அமைச்சர்கள் கருத்து வெளியிட்டதனால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி போன்றவர்கள் அமைச்சர் அர்ஜூனவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர் . அமைச்சர் தயா கமகே, அர்ஜூனவிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டில் எரிபொருள் மாபீயா ஒன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். இதன் போது இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி, தொடர்புடையவர்களை தண்டிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.