2019ஆம் ஆண்டில் நான்காயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ள இலங்கை

 நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு, செலவுத் திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளார்.அமைச்சர் மங்கள சமரவீர தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை பாணந்துறை, கொரகானே பிரதேசத்தில் உள்ள தனது ரெய்போஸ் என்ட் இல்லத்தில் இருந்தவாறு தயார் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதன் காரணமாக மங்களவின் இல்லம் தற்போது சுறுசுறுப்பாக இயங்கி வருகிறதாக கூறப்படுகிறது.நிதியமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் பலர் கடந்த சில தினங்களாக காலையில் இருந்து நள்ளிரவு வரை வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் நான்காயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதால், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்து கொள்வது குறித்து இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரியவருகிறது.