வெளிநாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் சேர்ந்து இலங்கை முஸ்லிம்களுக்கான சிவில் அமைப்பொன்றை உருவாக்கத் தயாரா?

RAAZI MUHAMMADH JAABEER

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர் சமூகம் உள்நாட்டு அரசியலில் வெளிநாடுகளின் தாக்கத்தை நன்றாகப் புரிந்து கொண்டார்கள்.கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட தமிழர் சமூகம் தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு இலங்கையில் அரசியல் கட்சி ஒன்று மட்டும் போதாது என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

படித்த தமிழர்களைக் கொண்டு உறுதியான ஒரு சிவில் சமூகத்தை அவர்கள் கட்டியெழுப்பியதோடல்லாமல் இலங்கைத் தமிழர்களின் விவகாரங்களில் அழுத்தம் கொடுப்பதற்கான வெளிநாட்டுத் தமிழ் சமுகமொன்றை அவர்கள் ஒழுங்கமைத்துவிட்டார்கள்.

இன்று இலங்கையில் காணாமல் போன தமிழர்களுக்காக ஐநாவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு முழு ஐரோப்பாவிலும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். உள்நாட்டுக்குள் அரசாங்கம் ரகசியப்படுத்த நினைக்கும் சில தமிழர் விவகாரங்கங்களை வெளிநாட்டுத் தமிழர்கள் சர்வதேச சமுகத்தின் கவனத்தை இழுத்துவிடுகிறார்கள்.

ஆனால் ஆயிரக்கணக்கான இலங்கை முஸ்லிம்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.இலங்கையில் எத்தனையோ பிரச்சினைகள் முஸ்லிம்களுக்கு இருக்கின்றன.சர்வதேசத்தின் கவனத்தை இழுக்க வெளிநாட்டில் வாழும் ஒரு முஸ்லிம் அமைப்பு முனையவில்லை.இது தமிழர்களாக இருந்தால் கட்டாரில் இலங்கை ஜனாதிபதி வந்தபோது ஆகக்குறைந்தது கட்டார் வெளிவிவகார அமைச்சிடம் ஒரு மகஜராவது சமர்ப்பித்திருப்பார்கள்.இலங்கை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று ஜம்மியதுல் உலமாவை மஹிந்த தூதனுப்பியபோது கூட வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்கள் ஏதாவது செய்திருக்கலாம்.

நடந்தவை நடந்ததாக இருக்கட்டும்.இனியாவது வெளிநாட்டில் இருக்கும் இலங்கை முஸ்லிம்களை இந்த விவகாரத்தில் ஒன்றுபடுத்த வேண்டும்.

இது சிந்திக்கவேண்டிய தருணம்.வெளிநாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் சேர்ந்து இலங்கை முஸ்லிம்களுக்கான சிவில் அமைப்பொன்றை உருவாக்கத்தயாரா?