ஊடகவியலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் வீடுகள் வழங்க ஊடக அமைச்சு நடவடிக்கை !

அஸ்ரப் ஏ சமத்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுததாபணத்திற்கு சொந்தமான கோமகமவில் உள்ள  காணியில் 1500-2000 வீடுகளை நிர்மாணிதது ஊடகவியலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் வழங்குவதற்கு ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 
நேற்று ஊடக அமைச்சார் ஜயந்த கருநா திலக்க  அமைச்சின் செயலாளர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவர் அதிகாரிகள் இக் காணியை பார்வையிட்டதுடன் இக் காணியில் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் பார்வையிட்டார்கள்.
இவ் வீடுகள் கொழும்பில் ஊடக நிறுவனங்களில் கடமைபுரிகின்றவர்கள் வாடகை வீடுகளில் வாழுகின்ற ஊடகவியாளார்களுக்கு  வழங்கப்படும்.இதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியினதும் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த ஜனாதிபதித தேர்தலின்போது   ஊடகவியலாளர்களுக்கு கொழும்பு மாவட்டத்தில் கோமகவில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என அறிவிருத்தமை குறிப்பிடத்தக்கது.
ja_Fotor ja1_Fotor