செவ்வாய் கிழமை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமாயின் 19 ஆம் திகதி வேட்புமனுக்களை வெளியிடும் தினம் அறிவிக்கப்படும்

  உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் செவ்வாய் கிழமை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படுமாயின் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறும் தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் வேட்புமனுக்களை வெளியிடும் தினம் குறித்து தீர்மானிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 அமைச்சர் பைசர் முஸ்தபாவை இன்று தேர்தல் ஆணைக்குழுவில் சந்தித்த போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை கூறியுள்ளார்.தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டு அதனை உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு அனுப்பியுள்ளார்.
 உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் அதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.