அமெரிக்கா- மெக்சிகோ இடையிலான சியூடாட் அக்குனா நகரை இன்று தாக்கிய கொடூர சூறாவளிக்கு 13 பேர் பலியாகினர்.
இங்குள்ள வீடு, வாகனங்கள் மற்றும் மரங்களை சாய்த்துப் போட்டு மக்களை நிலைகுலைய வைத்த இந்த சூறாவளி, ஒரு தாயின் கையில் இருந்த குழந்தையை பறித்துச் சென்றதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். 15 ஆண்டுகளாக இதைப்போன்ற சக்திவாய்ந்த சூறாவளியை இப்பகுதி மக்கள் சந்தித்ததில்லை என கூறப்படுகின்றது.
இந்த சூறாவளியின் தாக்கத்துக்கு 3 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 750-க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
இந்த சூறாவளியின் தாக்கத்தால் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் கடுமையான மழை பெய்தது. மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 12 பேர் அடித்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.