கோல்டன் வீல்பரோ விருதுகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

அஷ்ரப் ஏ சமத்

இலங்கையின்  பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு கோல்டன் வீல்பரோ விருதுகள்  வழங்கப்பட உள்ளன.
கீத்திமிக்க  புரதான வரலாற்றை  எடுத்துக் காட்டும்   நினைவுச் சின்னங்கள் முதல்  தற்காலத்தின் வானுயா்ந்த கட்டங்கள் வரை வியக்கத்தக்க பொறியியல் மற்றும் கட்டக்கலைச் சிறப்புக்கலை பிரதிபலிக்கும்  கட்டுமானப் படைப்புக்கள்பலவற்றை இலங்கையில்  காணக்கூடியதாக உள்ளது. 
இதற்காக வரலாற்றில் முதல் தடவையாக  இத்தகைய மகோன்னத கட்டுமானப் படைப்புக்களை  இனங்கண்டு  அவற்றை இனங்கண்டு  உருவாக்கியவா்களுக்கு  விருது வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்டுகின்றது.  என  இத்திட்டத்தினை நேற்று (25) கொழும்பு காலிமுகத் திடலில் மேல்மாகண அபிவிருத்தி ம.நகர அமைச்சா் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆரம்பித்து வைத்தாா்.
இத் திட்டத்தில் வெற்றியீட்டுபவா்களுக்குப் பிரதான  பரிசாக  பொன்னிறம் புசப்பட்ட நிஜ அளவிலான ஒற்றைச் சக்கர தள்ளுவண்டி அல்லது வீல்பரோ(Wheelbarrow) ஒன்று வழங்கப்பட இருக்கிறது.
 
இலங்கையில்  பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாபெரும் கட்டமைப்புத் திட்டங்களை  எடுத்துக் காட்டும் www.srilankaskyline.com என்ற  நவீன வலைத்தளமும்  அமைச்சா் பாட்டலியினால் ஆரம்பித்து வைக்க்படப்டது.
 
நன்மதிப்புக்குரிய Marcom மார்கொம் முகவா் நிலையமான the 7th Frontier  த ஏழாவது பொரண்டினா் ஆரம்பித்துள்ள மற்றுமொரு புதிய வேலைத்திட்டமே  sri Lanka Skyline ஆகும்.  இலங்கையில் இடம்பெரும் சகல பிரதான அபிவிருத்தித் திட்டங்களின் விபரங்கள் அனைத்தும் இலகுவில் அறிந்து கொள்ளக் கூடிய வசதியை உள்நாட்டு  மற்றும் வெளிநாட்டு  முதலீட்டாளா்களுக்கும்  பொதுமக்களுக்கும்  இது வழங்குகின்றது.  இதனைத் தேசிய  அபிவிருத்தியின் ஓர் அளவுமானியாகவும் கொள்ளலாம்.  மாநகர மற்றும் மேல் மாகாண  அபிவிருத்தி  அமைச்சின் ஒத்துழைப்புடன்  ஏற்பாடு செய்யப்படும்   sri Lanka Skyline
விருதுகள் திட்டமானது  இலங்கையின் அதிமுக்கியமான கடந்த கால மற்றும்  நிகழ்கால  அபிவிருத்தி வேலைத்திட்டஙகளை உலகிற்கு  எடுத்துக் காட்டும் அதே வேளையில் முதலீட்டாளா்களின் நம்பிக்கை வளா்த்து மேலும்  பெரிய சிறப்பான அபிவிருத்தித் திட்டங்களை ஊக்குவிப்பதற்கு வழிகோலுமென எதிா்ப்பாக்க்படுகின்றது.
கோல்டன் வீல்பரோ விருது பத்து பிரிவுகளில் வழங்கப்படும் அதியுா்ந்த கட்டமைப்பு அதியுயா்ந்த கட்டடம், அதியுயா்ந்த  ஹோடடேல்  அதிநவீனவடிவமைப்பு  ஆண்டின் அபிவிருத்தியாளா் ஆண்டின்  கட்டக் கலைஞா் என்பன அவற்றுள்  உள்ளடங்கும்.  இலங்கையின் கீா்த்திமிக்க புரதான  வரலாற்றை உலகின் கவனத்திற்குக்  கொண்டுவரும்  நோக்குடன் ஒவ்வொரு  வருடமும் புரதான கட்டக்கலையின்  அதிசய படைப்பு  ஒன்றை கோல்டன் வீல்பரோ  விருக்காக நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக  அமைச்சா்  அங்கு தெரிவித்தாா்