பிஜிஜியாபன் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 123 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் மெக்சிகோ நகரில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து பேரலைகள் எழுவதற்கான வாய்ப்பு உள்ளது என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், இன்று மாலை வெளியான தகவலின்படி, இன்றைய நிலநடுக்கத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.