எதிர்வரும் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.காங்கிரஸின் வெற்றி உறுதி !

இவ் வருட இறுதியில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரு புரட்சியான  தேர்தலுக்கு முகம் கொடுக்கவுள்ளனர். அதனால் கிழக்கில்  மக்கள் ஆதரவை இழந்து அரசியல் மரண பாதையில் சென்று கொண்டு இருக்கும் ஹக்கிம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் கிழக்கில் இன்று மக்களின் பெரும் ஆதரவுடன் இருக்கும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குமிடையில் பலப்பரிட்சையாக நடைபெறும் தேர்தலாகவே இருக்கும். அதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி பெறுவது  உறுதியான முடிவாகி விட்டது. அந்த உறுதியை தடுக்க முஸ்லிம் காங்கிரஸ் பல காய் நகர்த்தலை செய்து வருகிறது. அதாவது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது போலி குற்றச்சாட்டு பொய் பிரச்சாரம் நடைபெறாத அபிவிருத்திக்கான ஆரம்ப வேலைகள் என பல சதி முயற்சிகளை செய்து வருகின்றனர். இவைகள் யாவும் 18 வருடமாக ஹக்கிமை நம்பி ஏமாற்றம் அடைந்த சமுதாயம் இன்று  சூடு கண்ட பூனை போல்  இருக்கும். மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை  தீர்க்கும் பாரிய பொறுப்பை அவர்கள் நம்பி இருக்கும் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் அவர்கள்  ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றார் .
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் மிகவும் முக்கியமான மாவட்டம் அம்பாறையாகும். அந்த மாவட்ட மக்கள் விரும்பும் அரசியல் கட்சியே முஸ்லிம்களின் தேசிய கட்சியாகும். இலங்கை முஸ்லிம்களின் முதுகெழும்பு என்றும் அம்பாறையை சொல்வது உண்டு. அப்படி ஒரு சக்தி கொண்ட அம்பாறை மக்கள் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அதை பலப்படுத்தி சமுதாயத்தின் கட்சியாக தக்பீர் முழக்கத்தோடு தலைமேல் தூக்கி வைத்து இருந்தனர். ஆனால் அஸ்ரப் அவர்கள் மறைந்த பின் குர்ஆன் ஹதீஸ் மசூரா என்ற கோட்பாட்டில் உருவான அந்த கட்சியின் தலைமை மக்களிடையே பொய் பேசுவது ஊர்களிடையே பித்னாவை உருவாக்குவது நன்பர்களிடையே பிரிவுகளை உருவாக்குவது கட்சியில் மது மங்கைக்கு அடிமையானவர்களை சேர்த்து ஹோட்டல்களில் கூத்தாட்டம் இப்படி இஸ்லாத்துக்கு முரனான பாதையில் முஸ்லிம் காங்கிரஸ் பயனம் செய்வதை பொறுக்க முடியாத மக்கள் இன்று இறையச்சத்துடன் அரசியல் செய்யும்  அமைச்சர் றிசாத் அவர்களின் அரசியல் வாழ்க்கையை பலப்படுத்த முன் வந்துள்ளனர் அதற்காக அம்பாறை மக்கள் அனிதிரண்டுள்ளனர். 
அம்பாறையின் அரசியல் களம் என்பது 70% வீதம்  முஸ்லிம்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கின்றனர் இதை பலப்படுத்தி அந்த மக்களின் பிரச்சினையை தீர்க்க தலைவரின் ஆலோசனைக்கு அமைய கட்சியை விஸ்தரிக்க அதன் பிரதி தலைவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  கலாநிதி A M ஜெமீல் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றார். அத்தோடு கடந்த றாமழான் மாதம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் 
அதே போல் கடந்த வாரம் ஒலுவில் நகருக்கு சென்று அங்கு மத்திய குழு தலைவர் அஸ்ஹர் அவர்களின் தலைமையில் கட்சியின் எதிர்கால திட்டம் செயல்பாடுகள் என்பன பற்றி விரிவாக  ஆராயபட்ட போது  மக்களின் கருத்துக்களை செவிமடுத்த பிரதி தலைவர் கலாநிதி  ஜெமீல் அவர்கள் கருத்து தெரிவிக்கயில், 
கடந்த காலங்களை போன்று ஒலுவில் மக்கள் தனக்கு ஆதரவு தெரிவித்து வருவதை மறக்க முடியாது அவர்கள் சமுதாய சிந்தனை கொண்டவர்கள் அதனால் புதியவர்களையும் கட்சியில் இனைத்து கொள்ள வேண்டும். அதற்கு பழையவர்கள் பல தியாகங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்தோடு மிக விரைவில் இங்கு உள்ள பிரச்சினைகளை தலைவரிடம் கூறி தீர்த்து வைப்பதாக கூறியவர் இது போன்ற கலந்துரையாடல்கள் பல ஊர்களிலும் நடத்தி கட்சியை புணரமைப்பு செய்யவுள்ளதாக பிரதி தலைவர் கூறினார் அப்போது;  சேர் இப்படி இதுவரை எவரும் எங்களிடம் வந்து பேசவில்லை நீங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு எடுக்கும் நடவடிக்கைக்கு பூரண ஆதரவை தருவோம் எமது தலைவருக்காக என்று ஆதரவாளர்கள்  கூறினார்கள். அந்த கலந்துரையடலில் பிரதேச முக்கியஸ்தர்கள் ஊடகவியளாலர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 
அம்பாறை மாவட்டத்தில் பல அமைப்பாளர்கள் இருந்தும் அவர்களின்  பணி கட்சியின் வளர்ச்சிக்கு  போதாத நிலையில் மாவட்ட பொறுப்பாளர் என்ற ரீதியில் கட்சி வளர்க்க களத்தில் இறங்கி இருக்கும் பிரதி தலைவரின் செயற்பாடுகள் வரவேற்கதக்கது. இப்படியான கலந்துரையாடல் பிரதி தலைவர் நடத்துவதால் எதிர்வரும் தேர்தலில் அம்பாறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமோக வெற்றி பெறுவது உறுதி அதை யாரும் தடுக்க முடியாது என ஆதரவாளர்கள் கருத்து தெரித்தனர். 
 
முஸ்லிம் காங்கிரஸின் கடந்த கால அரசியல் வெற்றிக்கு அம்பாறை மாவட்டத்தில் உறுதுணையாக இருந்தவர் கலாநிதி A M ஜெமீல் அவர்கள் என்பது நாடறிந்த உண்மை.  அதனால் எதிர்வரும் தேர்தலில் அவரின் முயற்சியால் அம்பாறை மாவட்டத்தில் அல்லாஹ்வின் உதவியால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி பெற்று அதன் தலைவர் அமைச்சர் றிசாத் முஸ்லிம்களின் தேசிய தலைவர் என்ற விருதை பெற்றுக் கொள்வார். 
ஜெமீல் அகமட்