இலங்­கைக்கு விஜயம் செய்த சவூதி இளவரசர் – சுமார் 4 மணி நேரத்தினுள் பல முக்கிய முடிவுகள்

 

சவூதி அரே­பி­யாவின் இள­வ­ர­சரும் உலகின் முன்­னணி தொழி­ல­தி­பரும் கொடை­வள்­ள­லு­மான அல் வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸ், நேற்­றைய தினம் இலங்­கைக்கு விஜயம் செய்து ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் ஆகி­யோரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­துடன் இலங்­கையின் பல்­வேறு துறை­க­ளிலும் முத­லீடு செய்யத் தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

நேற்றுக் காலை தனது வர்த்­தக தூதுக் குழு­வினர் சகிதம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு சுமார் நான்கு மணி நேரம் மாத்­தி­ரமே இங்கு தங்­கி­யி­ருந்த அவர், வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரை தனித்­த­னி­யாகச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் இலங்­கையின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி குறித்து மகிழ்ச்சி வெளி­யிட்ட அவர், இலங்­கையின் சுற்­றுலாத் துறை உட்­பட பல்­லேறு துறை­களில் பாரிய முத­லீ­டு­களைச் செய்ய தான் விருப்பம் கொண்­டுள்­ள­தாகக் குறிப்­பிட்டார்.


அத்­துடன் இலங்கை முத­லி­டு­வ­தற்­கான சிறந்த களம் என்­பதை ஏனைய சவூதி முத­லீட்­டா­ளர்­க­ளிடம் சிபா­ர்சு செய்­வ­தா­கவும் இலங்­கையில் உள்ள வர்த்­தக வாய்ப்­புகள் குறித்து சவூதி முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் நோக்கில் சவூதி அரே­பி­யா­வுக்கு விஜயம் செய்­யு­மாறும் அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அழைப்பு விடுத்தார்.

சவூதி அரே­பியா தொன்­று­தொட்டே இலங்­கையின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­காக வழங்கும் ஒத்­து­ழைப்பை பாராட்­டிய ஜனா­தி­பதி, அண்­மையில் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட இலங்கை மக்­க­ளுக்கு இள­வ­ரசர் வலீத் வழங்­கிய நிதி உத­வி­யையும் பாராட்­டினார்.

அத்­துடன் சவூதி அரே­பி­யாவில் பணி­யாற்றும் சுமார் நான்கு இலட்சம் இலங்­கை­யர்கள் நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு பெரும் பங்­க­ளிப்பு நல்­கு­வ­தா­கவும் ஜனா­தி­பதி தெரிவித்தார்.

இச் சந்திப்பின்போது சவூதி இளவரசர் அல்வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட விருதொன்றை வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.