பட்டம் பதவிகளுக்கு சோடை போபவரா அமைச்சர் றிசாத் பதியுதீன் ?

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ (அமைச்சர் றிசாதிற்கு வாய்ப்பூட்டுப் போடப்பட்டுள்ளது என்ற கட்டுரைக்கான பதில் கட்டுரை)

முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்

 கடந்த அரசு ஆட்சிக்காலத்தில் ஆட்கடத்தல் ,கிறிஸ்மனிதன் பலசேன அச்சுறுத்தல் என்பன இருந்ததை நாம் அனைவரும் அறிவோம் ரமழான் மாதத்தில் கூட நோன்பு நோற்பது கூட பெரும் சவாலாக இருந்ததை நாம் எப்படி மறப்பது .இதற்குச் சரியான தீர்வு வழங்கப்படாமையால் முஸ்லிம் பிரதேசங்கள் கடும் பதற்ற நிவையில் இருந்தது.அப்போதைய ஜனாதிபதி சொன்னார் எனது அரசு சலூன்கடை போன்றது விரும்பியோர் இருக்கலாம் அல்லது போகலாம்.வெளியே உள்ளோர் உள்ளே வரலாம்.அரசை யாரும் அடிபணியச்செய்ய முடியாத காலகட்டம் அது சர்வ அதிகாரம் நின்று விளையாடியது.

இக்கால கட்டத்தில்; எந்த ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜினாமாச் செய்தார்களா ? இல்லை. ஏனென்றால் அன்றைய சூழல் கடினமானது.இராஜினாமாச் செய்வதன்மூலம் இலங்கையில் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது.கடந்த காலத்தில் ஈரோஸ் சார்பில்; தெரிவுசெய்யப்பட்ட 13 பாரளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றைப் பகிஸ்கரித்ததன் மூலம் எதனைச்சாதித்துக் காட்டினார்கள்.

ஆகவே, இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கின்றபோது பாராளுமன்ற உறுப்பினர்பதவி,அமைச்சுப்பதவி போன்றவற்றை துறக்க வேண்டும்.வருடாவருடம் சம்பிரதாய ரீதியாக ஜனாதிபதியாலும்,பிரதமராலும் நடாத்தப்படும் இப்தார் நிகழ்வைப் பகிஸ்கரிக்க வேண்டும் எனக்கூறுவதெல்லாம் புத்திசாதுரியமானதல்ல.எமது பிரச்சினைகளை முறையிடும் களமாகவும்,தீர்வுகாணும் களமாகவும் அந்த இப்தார் நிகழ்வுகளை நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது.

மஹிந்த அரசின் ஆட்சியைக் கவிழ்க்க சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட காலகட்டத்தில் சில முஸ்லிம் அமைச்சர்கள் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டு அரசுடன் பலமாக ஒட்டிக்கொண்டு இருக்க, ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு வர மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என அறிக்கைவட்டதை திரும்பிப்பாருங்கள்.

ஆனால் வன்னியின் சிங்கம் றிசாத் பதியுதீன் அவர்கள் தன்னிடம் இருந்த ,பலமான கைத்தொழில் வர்த்தக அமைச்சை துர்க்கி எறிந்துவிட்டு எதிரணியுடன் இணைந்து மகிந்தவுக்கு எதிரான போராட்டத்தில் குதித்த முதல் சிறுபான்மை அமைச்சர் என்னும் பெயரைப் பெற்றுக்கொண்டார்.ஒளிவுமறைவு இன்றி தபால் வாக்குத்தினத்திற்கு பலநாள் முன்பே மைத்திரிக்கு வாக்களிக்குமாறு தெளிவாகக்கூறினார்.பட்டம் பதவிகளுக்காக சோடை போபவர் இவரல்ல என்பது தெளிவாகிறது.இங்கே இதுதான் தலைமை,துணிவு,தெளிவு,தூரநோக்கு,தந்திரோபாயம் என்பன வெளிப்படுகிறது.

‘ எந்த அமைச்சை வீசிவிட்டு றிசாத் பதியுதீன் வந்தாரோ அதே அமைச்சை மைத்திரி அரசு தங்கத் தட்டிலே வைத்து அவரிடம் வழங்கியது.’இவருக்கு மட்டும்தான் அதே அமைச்சு வழங்கப்பட்டது.இதற்குக் காரணம் அவரின் திறமை,நேர்மை,துடிப்பான,சுறுசுறுப்பான பண்பு என்பன ஜனாதிபதியையும்,பிரதமரையும் கவர்ந்தமையாகும்.
இவர் தனக்குப்பலமான அமைச்சு கிடைத்துவிட்டது.சிறுபான்மை முஸ்லிம்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. ஏன்ற போக்கில் அரசுக்கு நல்ல பிள்ளையாக மறைந்தோ அல்லது மௌனித்தோ இருந்துள்ளாரா ? இல்லை ஒரு பொதும் இல்லை.அது கிறிஸ்தவப் பாரதியாரால் வன்னியுpல் ஏற்பட்ட முஸ்லிம் மீள் குடியேற்ற பிரச்சினையாக இருக்கலாம் அல்லது பௌத்த பிக்குகளால் இலங்கையில் எப்பகுதியில் எற்படும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கெதிரான ‘கடை எரிப்பு, பர்தா பிரச்சினை ,ஹலால் பிரச்சினை ,பள்ளிவாயல் உடைப்பு ,காணிப்பிரச்சினை ,எல்லைப்பிரச்சினை ,தொல்பொருள் பிரச்சினை ,அத்து மீpறல் சிலை வைப்பு ,உயர்பாதுகாப்பு காணிகள் சவீகரிப்பு ,இப்படி எந்தப்பிரச்சினைகளாக இருந்தாலும் முதலில் களத்தில் பாய்பவராகவும் , சேரடியாகச் சென்று உரிய உதவிகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவராகவும் அமைச்சர் றிசாதே முதலிடம் வகிக்கின்றார் என்பது வெளிப்படையான உண்மை.

இதனால் தீவிர போக்குடைய மதவாதிகள் இவரை இலக்கு வைத்து ஊடகத்தாக்குதலை மேற்கொள்கின்றனர்.’ மதவாதிகளுடன் மோதுவதையும், விவாதிப்பதையும் திட்டமிட்ட நாடகம் என்று எவ்வித அடிப்படையுமின்றி அறிக்கை விட்டவர்கள். இன்று அம்பாறை மாயக்கல்லி மலைச்சிலைப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததும், மரத்தலைவர், முதலமைச்சர்,மரப்பாராளுமன்ற உறுப்பினர்கள். பொதுபல சேனாவுக்கு விட்டுவிட்டு சில எதிர் அறிக்கைகளை விடுவதைக் காண முடிகிறது.

இது குறுநாடகமா? இவர்களுடன் அமைச்சர் றிசாத் கருத்தியல் ரீதியாக மோதினால் நாடகம்.நீங்கள் மோதினால் புனித யுத்தம்.இதை எங்கே கற்றீர்கள்? எப்படிச் செய்கிறீர்கள். இக்குறுநாடகம் மக்களிடம் இனியும் எடுபடாது.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு தற்போது இருக்கும் அமைச்சை விட பலமான பிரதமர் பதவியை வழங்கினால் கூட சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது முதலில் ஒலிக்கின்ற குரல் அவரின் குரலாகத்தான் இருக்கும் அவரின் குரலை பட்டங்களை வழங்கி மௌனிக்ச் செய்யலாம் .வாய்;பூட்டுப் பூட்டச் செய்யலாம். என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக சிலர் கனவு காண்கின்றனர்.இவர்கட்கு காலம் பலமுறை பதில் வழங்கியுள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான ஒருங்கிணைப்புக்குழுவுக்கு தலைவராக றிசாத் பதியுதீன் அவர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார்.இதைச்சிலரால் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளது.எதை யாரிடம் ஒப்படைத்தால் அது சிறப்பாக நடைபெறும் என்பதை ஜயாதிபதி நன்கறிவார்.இப்பதவி கிடைத்ததும் அமைச்சருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது என்று வெட்கமின்றி ஊடகங்களில் சிலர் எழுதுகிறார்கள்.

எனது கருத்து அமைச்சையோ ,பாராளுமன்ற உறுப்பினர் பதவியையோ துறக்காமல்.பலமான அமைச்சராக இருந்துகொண்டு எமது சமூகத்திற்கு அபிவிருத்தி,வேலைவாய்ப்பு,பாதுகாப்பு போன்றவற்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.சிறுபான்மை மக்களுக்கு ஒரு அநீதி நடந்தால், சீறிப்பாய்ந்து கண்டித்து உரியவாறு அணுகி தீர்வைப்பெற்றுக்கொடுக்க வேண்டும்.இதுதான் சிறந்த தந்திரோபாயம்.

‘ வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ தூங்கிக் கிடந்த பல அமைச்சுக்களை இவர் உயிர்ப்பித்துள்ளார்.எந்த அமைச்சைக்கொடுத்தாலும் இவர் சிறப்பாகச் செய்வார்……..இதுதான் ஆளுமை.