இறக்காமம் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவால் வசூலிக்கப்பட்ட பணம் மீள வழங்கப்படுமா?

இறக்காம பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் ஆகிய பிரதே மக்களுக்கான முழுமையான லவசகுடி நீர் இணைப்பை சவூதி அரேபியாவின் நிதாவுல் கைர் நிறுவனம் வழங்கியிருந்தது. இதற்கான நிதியானது அம்பாறை மாவட்ட உலமா சபையின் தலைவர் எஸ்.எச் ஆதம்பாவா மௌலவியினூடாக குறித்தநிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந் நிதிங்கலுக்கும் மு.காவுக்குமிடையில் எந்த தொடர்புமில்லையுமெஎனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களினூடாக அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வங்கல் அமைச்சின் இணைப்பு செயலாளர் ரகுமத் மன்சூர்  கலந்து கொண்டிருந்தார். இது அரசியல் மயப்படுத்தப்பட்டமை இதிலுள்ள முதற் தவறாகும். 

குறித்த நிகழ்வுகளினூடாக 80 அளவிலானோர் இலவச குடிநீர் இணைப்பை பெற்றிருந்தனர். இங்கு இலவச குடிநீர் வழங்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரிடையே இருந்தும் தலா 1500 ரூபாய்பணமானது அறவிடப்பட்டுள்ளது. குறித்த பணத்தை வழங்காவிட்டால் இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்படாது எனவும் அம் மக்களிடம் பகிரங்கமாகவே கூறப்பட்டுள்ளது. அந்த மக்கள் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதால் குறித்த பணத்தை மிகவும் சிரமப்பட்டே வழங்கியுள்ளனர். குறித்த மக்கள் அன்றாடம் உணவு உண்பதற்கே மிகவும் சிரமப்பட்டு வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தான் இலவச குடிநீர் இணைப்பின் இலட்சணையா? அன்றுகுறித்த பணத்தை முழுமையாக பயன்படுத்துமளவு செலவுகள் கூடஇடம்பெறவில்லையென குறித்த மக்கள் கூறுவதை அவதானிக்க முடிகிறது. இக் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளராக அறிவிப்புஉட்பட அனைத்து விடயங்களுக்கும் மு,காவின் இறக்காம மத்திய குழுவின் நாமமே போடப்பட்டுள்ளது. யாரோ நீர் வழங்குகிறார்கள்.மக்களின் பணம் வசூலிக்கப்பட்டு நிகழ்வு இடம்பெறுகிறது. பெயர்பெறுவது மு.காவினரா? இப் பெயர் பெரளுக்காவது இந்த சிறு பணத்தை செலவிட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யுமளவாவதுமு.காவிடம் பணம் இல்லையா? 

வசூலிக்கப்பட்ட பணம் மீள வழங்கப்படுமா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.