கட்டாரில் வாழும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் : அமைச்சர் ஜோன்

கட்டாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படும் என சுற்றுலா துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இலங்கையின் சுற்றுலா துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.

கட்டார் நாட்டு விமான சேவையின் ஊடாக இலங்கை பாரியளவில் வருமானத்தை பெற்று வருகிறது.

தற்போதைய நெருக்கடியால் இலங்கையில் ஏற்படும் பாதிப்பை குறைத்து கொள்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வளைகுடா பிரச்சினை நீடிக்குமாயின் கட்டாரில் வாழும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்.

இலங்கையில் வெளிநாட்டு நாணய மாற்று பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பு உண்டு என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

கட்டாரில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த 2 வருடங்களில் சவுதி அரேபியாவுக்கு அடுத்தப்படியாக இலங்கையர்கள் அதிகமாக கட்டாருக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.