எம்.றியாஸ்
தே.கா. உறுப்பினர்கள், மாற்றுக் கட்சி அரசியல்வாதிகள் அத்தனை பேரும் எஸ்.எம். சபீசை மிகுந்த பொறாமையுடன் பார்க்கின்றனர். எப்படி எஸ்.எம்.சபீசால் மட்டும் அதாஉல்லாவிடம் இப்படி விசுவாசத்துடன் இருக்க முடிகிறது என்பதுதான் அந்த ஆச்சரியம்..
அதாஉல்லா . யாரிடம் கோபித்துக் கொண்டாலும், நம்பாவிட்டாலும், எஸ்.எம். சபீசை மட்டும் மிகவும் அதீதமாக நம்புகிறார். காரணம், சபீஸ் அதாஉல்லாவிடம் காட்டும் விசுவாசம்.
சிறு பராயம் முதல் அதாஉல்லாவோடு இருந்து வரும் சபீஸ் , அரசியல்வாதிகளிடம் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் பழகுவதில் இனிமையானவர் என்று பெயர் பெற்றவர் ஆவார்.
இவரது துறை சார்ந்த அதிகாரிகளும், மிகவும் பணிவானவர், அதிர்ந்து பேசாதவர், கோபித்துக் கொள்ளாதவர், எதைச் சொன்னாலும் திருத்தமாக, மென்மையாக, நாகரீகமாக சொல்லக் கூடியவர் என்கிறார்கள்.
தனது துறை உயர் அதிகாரிகளிடமும், பிறரிடமும் கூட மிகவும் நாகரீகமாக பேசுவாராம் சபிஸ். யாரையும் ஒருமையில் பேச மாட்டாராம்.
தன் மீது வீசப் படும் விமர்சனங்களையும் அவதூறுகளையும் ஒரு புன்னகையோடு முடித்துக் கொள்ளும் திறமைசாலி.
அதாஉல்லா மீது இவர் கொண்டுள்ள விசுவாசத்திற்கு நிகராக தே கா. யாரும் கிடையாது என்பது எதிர்க் கட்சிக்காரர்களே வாசிக்கும் பாராட்டாகும்.