அரசாங்கத்தை சரியான பாதைக்கு கொண்டுவரும் பொறுப்பு ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது: டிலான் பெரேரா

நாட்டை பிளவுபடுத்தி சர்வதேச உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியை கையில் எடுக்க வேண்டும். அரசாங்கத்தில் இருக்கும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய காலம் வந்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். 

 

தவறான பாதையில் பயணிக்கும் அரசாங்கத்தை சரியான பாதைக்கு கொண்டுவரும் பொறுப்பு ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

மே தினத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பயணத்தில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படவுள்ளது என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.